மங்கலம்பேட்டை அருகே 3-வது வார்டு அண்டக்குளத்தான் தெருவில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கைப்பம்பு காட்சிப்பொருளாக இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாாிகள் கைப்பம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.