திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி லட்சுமிபுரம் சாலையில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் மற்றும் அதன் அருகிலேயே இறைச்சிக்கூடம் கட்டும் பணி 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இரண்டு கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.