கொடைக்கானல் அருகே பூம்பாறையில் பழனி முருகன் கோவிலின் உப கோவிலான குழந்தை வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி இருந்து அதிகாலை பூஜைகளில் பங்கு பெற வேண்டும் என்றால் பூம்பாறை கிராமத்தில் தங்கும் விடுதிகள் இல்லை. எனவே பூம்பாறையில் இரவு நேரங்களில் பக்தர்கள் தங்கிக்கொள்வதற்கு ஏதுவாக தங்கும் அறைகள் புதிதாக அமைத்துக்கொடுக்க வேண்டும்.