மதுப்பிரியர்களின் கூடாரமான பஸ்நிலையம்

Update: 2023-04-26 13:43 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையம் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கே உடைப்பதும், சண்டையிடுவதும் வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற பிரச்சினை தொடர்ந்து இரவு நேரங்களில் நடந்து வருகிறது. எனவே மாரண்டஅள்ளி போலீசார், இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்