தற்காலிக பாலம் சேதம்

Update: 2022-07-22 07:48 GMT

தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு இடையே நாஞ்சில் புத்தனாறுகால்வாய் செல்கிறது. கால்வாயில் மேல் குறுகலான பழமையான பாலம் இருந்தது. அந்த பகுதியில் விரிவாக்கப்பட்ட புதிய பாலம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவரை அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது, கால்வாயில் அதிகளவில் தண்ணீர் பாய்வதால் தற்காலிக பாலத்தின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, தற்காலிக பாலத்தை சிரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்