சங்கராபுரம் அருகே சோழம்பட்டு-தாவடிப்பட்டு இடையே உள்ள முத்தாறு பாலம் கடந்த 5 மாதத்திற்கு முன்பு பழுதானது. இதனால் சங்கராபுரத்தில் இருந்து கச்சிராயப்பாளையம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.