விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் இந்த பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?