பண்ருட்டி தாலுகாவை சுற்றி சுமார் 100 கிராமங்கள் உள்ளன. ஆனால், இங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் இரவு நேரத்தில் போதுமான அளவுக்கு மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சைக்காக செல்லும் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.