தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்

Update: 2023-04-23 17:42 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது. எனவே அந்த தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாலுசாமி, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும் செய்திகள்