தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

Update: 2023-04-23 17:40 GMT

சேலம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள 31-வது வார்டு பாண்டிய ராஜன் மற்றும் பார்க் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுரேஷ், சேலம்.

மேலும் செய்திகள்