தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மஞ்சவாடி ஊராட்சியில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக சான்றிதழ்கள் பெறவும், வீட்டுவரி ரசீது பெறவும், ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளிகள், பயனாளிகள், தங்களது அரசின் நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள் பெறவும் அலைக்கழிக்கபடுகிறார்கள். வேறொரு ஊராட்சியின் செயலாளர் இங்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவர் வருவதே இல்லை. இதனால் அவசர தேவைக்கு கையெழுத்து வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஊராட்சிக்கு நிரந்தரமாக ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சக்திவேல், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.