பண்ருட்டி ஒன்றியம் வீரப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில், மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கட்டிடம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.