விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.