கூடலூர் அருகே மந்தைவாய்க்கால் பாலம் அருகே மதுரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குழாய்கள் பதித்தபின்பும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட, மதுரை கூட்டுக்குடிநீர் திட்டபணி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.