கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் அருகே குளத்துப்பாளையத்தில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டுப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக சுகாதார வளாகத்தில் உள்ள குழாய்கள் பழுதடைந்தது. அதனால் பெண்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். இதனால் சுகாதார வளாகம் சுற்றி பல்வேறு வகையான செடி- கொடிகள், முட்செடிகள் முளைத்து சுகாதார வளாகத்தை சூழ்ந்துள்ளது. எனவே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.