அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் அறையில் நோயாளிகள் தங்கி மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த வார்டுகளில் மின் விசிறி கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விசிறிகளை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.