பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சிறுவயலூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மயான கொட்டகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.