கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் தார் சாலையில் திருக்காடுதுறை பிரிவு எதிரே கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட புளியமரத்தில் பெரிய அளவில் துவாரம் விழுந்துள்ளது. சாலையோரத்தில் உள்ள இந்த புளியமரம் வாகனங்கள் செல்லும்போது முறிந்து விழுந்தால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.