தூர்வாரப்படாத ஏரி

Update: 2023-04-19 11:57 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் பழைய ஏரி உள்ளது. இந்த ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைபெய்யும்போது மழைநீரை சேரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி மழைநீரை சேரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்