சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சாலையில் வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, பொற்றையடி ஆகிய ஊர்களில் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த ஊர்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் வெயிலில் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.