விபத்தை தடுக்க வேண்டும்

Update: 2023-04-19 08:50 GMT

நாகர்கோவிலில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் கணபதிபுரம் தபால் நிலையம் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் உள்ள சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையின் மேல்பகுதியில் சிமெண்டு சிலாப்கள் அமைக்கப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது கழிவுநீர் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி கழிவுநீர் ஓடையின் மீது சிெமண்டு சிலாப்புகள் அமைந்து விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமுதா, கணபதிபுரம்.

மேலும் செய்திகள்