நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க 6 கிலோ மீட்டர் தூரம் சென்று வாங்கி வருகின்றனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், நாமக்கல்.