சேலம் மாவட்டம் இலக்கியம்பட்டி பரமசிவகவுண்டர் தெருவில் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சரவணன், இலக்கியம்பட்டி, சேலம்.