அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

Update: 2023-04-16 17:08 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் பழைய பேட்டையில் இருந்து ஆத்தோர வீதி வரை, பஸ் நிலையத்தில் இருந்து வர்ண தீர்த்தம் கே.கே. நகர் வரை மற்றும் அரூர் ஏரியில் இருந்து பஸ் நிலையம் ஈஸ்வரன் கோவில் வரை செல்லும் கால்வாயை வியாபாரிகள் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 15 ஆண்டுகளாக பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா ?

-இஸ்மாயில், அரூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்