அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-04-16 17:07 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கரகதஅள்ளி ஊராட்சி கடமடை ஹவுசிங்போர்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இப்பகுதியில் 16 தெருவிளக்குகள் கடந்த 2 ஆண்டுகளாக எரியவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் கடமடை ஏரியில் கோழி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்