தர்மபுரி இலக்கியம்பட்டியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை ஓரங்களில் சில இடங்களில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.எம்.எஸ். காலனி பகுதியில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயின் கீழ்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய சீரமைப்பு நடவடிக்கையை எடுப்பார்களா?