கரூர் மாவட்டம், நெரூர், மல்லம்பாளையம் ஆகிய காவிரி ஆற்றிலிருந்து மணல்கள் கொண்டு வரப்பட்டு வாங்கல் உட்பட்ட நாவல் நகரில் இருப்பு வைக்கப்படுகிறது. இங்குயிருந்து பல்வேறு இடங்களுக்கு லாரி மூலம் மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல்கள் செல்லும் போது மேலே தார்பாய் போடமல் கொண்டு செல்வதால், சேலம், மதுரை ஆகிய தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது மணல்கள் காற்றில் பறக்கின்றது. இதனால் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் பட்டு அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.