அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேல்கரையில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரமாக ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மின்கம்பத்தை சுற்றி ஒருவர் வீடு அமைத்துள்ளார். இதனால் மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கின் வெளிச்சமானது சாலைக்கு தெரிவதில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைக்கு மின்விளக்கு வெளிச்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.