அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-04-12 17:24 GMT

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்து காந்தி நகரில் குப்பைகளை சேகாிக்க வண்டிகள் வருவதில்லை. குறிப்பாக பி.ஆா்.பி. நகர் 2-வது தெருவில் குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரிப்பது இல்லை. அருகே ஓடை இருப்பதால் பெரும்பாலானோர் ஓடையில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும், மூடாமல் உள்ள சாக்கடை கால்வாய்களை மூட வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரமேஷ், சேலம்.

மேலும் செய்திகள்