சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கண்மாய்களில் கருவேல மரங்களும் முட்செடிகளும் அதிகம் வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் முழு கொள்ளளவு நீரை சேமித்து வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.