லாட்டரி சீட்டுகள் விற்பனை

Update: 2023-04-12 14:32 GMT

பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குபேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் பரிசுகள் விழும் என்று எதிர்ப்பார்ப்பில் அந்த லாட்டரி சீட்டுகளை வாங்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் பரிசு விழாததால் நாள்தோறும் தங்களது பணத்தை இழந்து வருவதோடு, தங்களது வீட்டிற்கு செலவுக்கு கூட பணம் கொடுக்க மறுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்