பண்ருட்டி , எலந்தம்பட்டு, சிறுவத்தூர், திருவதிகை வழியாக கெடிலம் ஆறு செல்கிறது. விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆற்றை சரியாக பராமரிக்கவில்லை. இதனால் ஆற்றில் தற்போது செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சீராக செல்லாமல் அவை ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க ஆற்றை சரியாக தூர்வாரி முக்கிய இடங்களில் தடுப்பணைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.