கோவை மாநகராட்சி 26-வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் பொது கழிப்பிடம் இல்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிப்பவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே அங்கு ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக கழிப்பிடம் கட்டித்தர சம்பந்தபட்ட துறையினர் முன்வர வேண்டும்.