கோவிலை புதுப்பிக்க கோரிக்கை

Update: 2023-04-09 17:32 GMT

பாலக்கோடு கடைத்தெருவில் தர்மராஜா கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் முறையான பராமரிப்பு இன்றி உள்ளது. தற்போது கோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்து உடைந்து கீழே விழுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்