திருவெண்ணெய்நல்லூர் அருகே கீரிமேடு ஊராட்சியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்ததால், அதனை இடித்து விட்டு, புதிதாக கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பணிகளை தொடங்கி, விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.