ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் ரேஷன் கடை வரை உள்ள சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. இதனால் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, சாலையில் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.