ஆபத்தான பள்ளம்

Update: 2023-04-09 14:21 GMT

நாகை-நன்னிலம் சாலை சீயாத்தமங்கையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இயக்க தொட்டிகள் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவை மூடிகள் இன்றி ஆபத்தான பள்ளங்கள் போல காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி பள்ளத்துக்குள் விழுந்துவிடுகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளங்களை மூடவும், தொட்டிகளுக்கு முறையான மூடிகளை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்