நாகை மாவட்டம் கீழ்வேளூர் சந்தை தோப்பில் ஓடம்போக்கு ஆற்றின் படித்துறை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் படித்துறை சேதமடைந்து உடைந்த நிலையில் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் படித்துறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள படித்துறையை சீரமைக்க வேண்டும் ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.