தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமரம் 3-வது வார்டு பெரிய முக்கு தெரு பகுதியில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுவதோடு பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சுகாதார கேட்டை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?