தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 2-ம் தெரு குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ள காம்பவுண்டு சுவரை ஒட்டி குப்பைகளை கொட்டுகிறார்கள். அதுமட்டுமன்றி குப்பைகளை அங்கேயே வைத்து தீ வைத்து எரிப்பதினால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளின் சாம்பல் குளத்தில் கலப்பதினால் குளமும் மாசுபடுகிறது. நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.