சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா பல நாட்களாக இயங்காமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் ஏதேனும் குற்றச்சம்பவங்கள் நடந்தால் குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.