விழுப்புரம் கே.கே. சாலை மெயின் ரோட்டில் பொதுக்கழிப்பறை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.