பள்ளத்தை மூட வேண்டும்

Update: 2023-04-05 17:43 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம் ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகத்தின் எதிரில் சாலையோரத்தில் பாதாள சாக்கடைக்கு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும் 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்