நெய்க்காரப்பட்டி அருகே பாப்பம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் சுற்றுச்சுவர் கிடையாது. இதனால் அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகள் கூட்டமாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்து தொல்லை கொடுத்து வருகின்றன. இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை அப்புறப்படுத்துவதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.