பெங்களூரு எலகங்கா 7-வது கிராஸ் பகுதியில் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால் அந்த சாலை தற்போது மிகவும் மோசமாக மாறி உள்ளது. சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.