பெங்களூரு கோல்ஸ் பார்க் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் சிலர் கடைகள் அமைத்துள்ளனர். அந்த கடைகள் இரவு வரை அங்கு உள்ளதால், பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியாத உள்ளது. இதனால் அவர்கள் சாலையில் இறங்கி செல்லும்போது விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.