கோவை மாநகராட்சி 58-வது வார்டு எஸ்.ஆர்.டி. சாலையும், கே.பி.ஆர். சாலையும் சந்திக்கும் பகுதியில் பட்டுப்போன நிலையில் ராட்சத மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளன. சூறாவளி காற்று வீசும்போது, அந்த கிளைகள் முறிந்து சாலையில் செல்பவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அச்சப்படுகிறார்கள். மேலும் பள்ளி குழந்தைகள் செல்லும் முக்கிய சாலை என்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் ஆபத்தான அந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.