பெங்களூரு ஆயில் மில்லர்ஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்துள்ளன. இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.