பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் நடைபாதையில் மின்இணைப்பு பெட்டி உள்ளது. இந்த பெட்டி தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அந்த பெட்டி திறந்த நிலையில் இருப்பதால், மின்கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. இதனால் மின்சாரம் தாக்கி, பாதசாரிகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனவே பெஸ்காம் அதிகாரிகள் அந்த மின் இணைப்பு பெட்டியை சீரமைத்து கொடுக்க வேண்டும்.