திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டி வடக்கு அரசமரம் பஸ் நிறுத்தமானது கடைகள் மற்றும் வாகனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கடையில் மது மற்றும் புகையிலை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் கூட்டமாக இருப்பதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. இதனால் தெருவில் சிறுவர், சிறுமிகளை விளையாட அனுப்ப முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் அகப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தை மீட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.